‘வண்டிய ஓரமா நிறுத்த மாட்டியா’..? வியாபாரியின் கன்னத்தில் ஓங்கி அறைந்த திமுக பிரமுகர்.. ஷாக் வீடியோ!!!

Author: Babu Lakshmanan
18 August 2023, 12:46 pm

சேலம் அருகே வெள்ளிப்பட்டறை வியாபாரியை திமுக பிரமுகர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். வெள்ளி பட்டறை வைத்து நடத்தி வரும் இவர், தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக காரில் வந்த திமுக பிரமுகர் ராஜா, குறுகிய சாலை என்பதால் கண்ணனின் பைக்கை எடுத்தால் மட்டுமே செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

இதனை பார்த்த கண்ணன் உடனே ஓடிச் சென்று வண்டியை ஓரம்கட்டி, திமுக பிரமுகர் ராஜாவின் கார் செல்வதற்கு வழி விட்டுள்ளார். அப்போது, ‘வண்டிய ஓரமா நிறுத்த மாட்டியா’..? என்று கண்ணனை திட்டியடி காரில் சென்றார்.

இதைக் கவனித்த கண்ணன், தனது தலையில் அடித்துக்கொண்டே மனவேதனை அடைந்துள்ளார். உடனே காரில் இருந்து இறங்கி வந்த திமுக பிரமுகர் ராஜா, வியாபாரியின் கண்ணனை இழுத்து பிடித்து கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ