முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்த சூப்பர் ஸ்டார்..? அவரே சொன்ன தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 August 2023, 9:38 pm

ஜெயிலர்’ படத்தின் ரிலீசுக்கு முன்பே நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றார். ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று சாமியார்களை சந்தித்தார்.

அதோடு தயானந்த சரஸ்வதி சாமிகள் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்ததோடு, பத்ரிநாத் கோவிலிலும் வழிபாடு செய்தார். அதன்பிறகு அவர் இமயமலை பயணத்தை முடித்து திரும்பினார்.

இந்த வேளையில் திடீரென்று அவர் ஜார்கண்ட் ஆளுநரான தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாக கூறினார்.

மேலும் ரஜினி காந்த் தொடர்ச்சியாக சுற்றுப்பயணத்தில் உள்ளார். இந்நிலையில் தான் இன்று அவர் திடீரென உத்தர பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவுக்கு சென்றார்.

அங்கு ரஜினிகாந்த் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்திடம் லக்னோ வருகை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், முதல்வருடன் சேர்ந்து ஜெயிலர் திரைப்படத்தை பார்க்க உள்ளதாக தெரிவித்துவிட்டு சிரித்தபடி காரில் புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் பத்திரிகையாளரிடம் நடிகர் ரஜினி பேசிய வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதற்கிடையே தான் நடிகர் ரஜினிகாந்த் எதற்காக யோகி ஆதித்யநாத்துடன் சேர்ந்து ஜெயிலர் திரைப்படம் பார்க்கிறார்? இந்த சந்திப்பு என்பது திரைப்படத்துக்கானதா? இல்லாவிட்டால் பின்னணியில் அரசியல் சார்ந்த விஷயங்கள் உள்ளதா? நடிகர் ரஜினிகாந்த் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளாரா? என சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…