பாவனி என்னை ஏமாத்திட்டா?.. Breakup குறித்து விளக்கம் அளித்த அமீர்..!

Author: Vignesh
19 August 2023, 11:00 am

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் பாவினி. மாடல் அழகியான இவர் சின்ன தம்பி தொடரில் நடித்து சீரியலில் என்ட்ரி ஆனார். தொடர்ந்து தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் பல்வேறு சீரியலில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

இவர் தெலுங்கு நடிகர் பிரதீப் குமாரை 2017 இல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் பிரதீப் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அதன் பின்னர் மீண்டும் சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் தான் பிக்பாஸில் கலந்துக்கொண்டார்.

பிக்பாஸில் அமீர் இவரை ஒரு மனதாக உருகி உருகி காதலித்தார். பின்னர் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பின்னர் அமீரின் உண்மையான காதலை புரிந்துக்கொண்டு அவருக்கு ஓகே சொல்லி காதலித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்கள்.

அதற்கு ஓகே சொன்னதே பாவினியின் அம்மா தானாம். ஒரே பிளாட்டில் ஒன்றாக இருங்கள் என அட்வைஸ் கொடுத்தாராம். மேலும், இவர்களுடன் அமீரின் பெரியம்மா மற்றும் அண்ணனையும் அந்த வீட்டில் தங்க வைத்துள்ளதாக பாவனி கூறியிருந்தார்.

ஆனால், தற்போது ஒரு அதிர்ச்சிகரான தகவல் கிடைத்துள்ளது. ரசிகர் ஒருவர் பாவினியிடம் ” நீங்க சிங்கிளா?” என கேட்டதற்கு ஆம் என்று பதிலளித்துள்ளார். பாவினியின் இந்த பதில் ரசிகர்களை பேரதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

amir

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் பாவனி தான் சிங்கிள் எனக் கூறியிருந்ததால் அவர்கள் பிரேக் அப் செய்துவிட்டார்கள் என செய்தி பரவியது. தற்போது, இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்திருக்கும் அமிர் பாவனி ஜோடி தங்களது பிரேக் அப் செய்தி உண்மையில்லை வதந்தியை பரப்புகிறார்கள் என தெரிவித்துள்ளார்கள். மேலும், பாவனி தன்னை ஏமாற்றி விட்டதாக வரும் செய்திகள் அனைத்தும் பொய்யானது என்று அமீர் தெரிவித்துள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்