உடலுறவு இல்லாத வாழ்க்கை நரகம் போன்றது… இப்படி தான் உடலுறவு கொள்ளவேண்டும் – சர்ச்சை கிளப்பிய கஜோல்!

Author: Shree
19 August 2023, 1:39 pm

மின்சார கனவு என்ற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக ஜொலித்தவர் தான் கஜோல். இவர் தனுசுடன் வேலையில்லா பட்டதாரி 2 என்ற படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருப்பார். பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இந்நிலையில் கஜோல் கடந்த ஆண்டு சர்ச்சைக்குரிய வகையில் உடலுறவு குறித்து பேட்டி ஒன்றில் பேசி முகம் சுளிக்க வைத்ததை ரசிகர்கள் தற்போது மீண்டும் நினைவுகூர்ந்து அவரை விமர்சித்து வருகிறார்கள்.

அந்த பேட்டியில் பேசிய கஜோல், வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று உடலுறவு. உடலுறவு இல்லாமல் மனிதனால் வாழவே முடியாது. அது இல்லாத வாழ்க்கை நரகம் போன்றது. தன்னுடைய துணையுடன் இணையும் பொழுது இரு மனங்கள் ஒன்றாக இணையும் ஆத்மார்த்தமான உணர்வு இருக்க வேண்டும். இந்த உணர்வு யாரேனும் ஒருவருக்கு இல்லை என்றாலும் கூட உடலுறவு முழுமை பெறாது. அது நிச்சயமாக முழுமையான உடலுறவாக இருக்காது அப்படி இருந்தால் தான் இல்லற வாழ்க்கை சிறக்கும் என கஜோல் பேசியது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது இந்த செய்தி மீண்டும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்