ஸ்டேஷன் வரை சென்ற தமிழ் நடிகரின் பஞ்சாயத்து..’ஜெயிலர்’ பட நடிகை மிர்ணாவின் பகீர் பிளாஷ் பேக்..!
Author: Vignesh19 August 2023, 7:31 pm
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், சுனில், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வந்தது.

உலகம் முழுவதும் வெளியான ஜெயிலர் படத்திற்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் நாளில் மட்டும் ரூ.100 கோடி வரை வசூல் செய்ததாக தகவல் வெளியானது. அதுமட்டுமில்லாமல், படத்தை பார்த்தவர்கள் அனைவரும் பாஸிட்டிவ்வான ரிவ்யூ கொடுத்து வருவதால், மக்கள் குடும்பம் குடும்பமாக சென்று படத்தை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயிலர் திரைப்படம் வெளியான ஒரு வாரத்தில் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ.375.40 கோடியை கடந்துள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் போஸ்டரை பகிர்ந்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த படத்தில் நடித்த பலரை பற்றியும் சமூக வலைதளங்களில் பலவகையான மீம்ஸ்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில், இந்த படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த நடிகை பற்றி பலவிதமான மீம்ஸ்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.
இவர் மலையாள மொழியில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். ஜெய்லர் படத்தின் மூலம் தான் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் கொடுத்ததால் மிர்ணாவுக்கு தமிழில் அடுத்தடுத்த படங்கள் வர தொடங்கியுள்ளன.
இப்படி ஒரு நிலையில், இவர் ஏற்கனவே விவாகரத்து ஆனவர் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது, இவர் ஜெய்லர் படத்தின் மூலம் மிர்ணா என்று பிரபலமாக இருந்தாலும், இவர் இதற்கு முன்னால் இவருக்கு வைத்திருந்த பெயர் அதிதி மேனன். மேலும், இவருக்கும் தமிழ் நடிகர் அபி சரவணன் ஏற்கனவே பஞ்சாயத்து இருந்து வருகிறது.
அபி சரவணன் வேறு யாருமில்லை அட்டக்கத்தி, குட்டி புலி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல, இவர் பட்டதாரி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் தான் மிர்ணா அதாவது அதிதி மேனனும் இவரும் ஜோடியாக நடித்திருந்தனர். இப்படி ஒரு நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு அபி சரவணன் மீது காவல் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
இதனிடையே, அதிதி மேனனும் அபி சரவணனும் பட்டதாரி படத்தின் போது நட்பாக பழகி வந்ததாகவும், அது காதலாக மாறி இரண்டு பேரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். மேலும், தன்னை திருமணம் செய்து கொண்டதாக அவர் போலியான சான்றிதழ்களை காவல் நிலையத்தில் சமர்ப்பித்திருக்கிறார் என்றும் மிர்ணா கூறியிருந்தார்.
மிர்ணாவும், நானும் கடந்த மூன்று வருடங்களாக கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறோம். எங்கள் இருவருக்கும் திருமணம் ஆனதற்கான மேலும் சில ஆதாரங்கள் உள்ளதாக அபி சரவணன் கூறியிருந்த நிலையில், அபி மற்றும் அதிதி ஒரு தனி அறையில் ரகசியமாக திருமணம் செய்து கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதற்கு பின்னர் அபி சரவணன் தனது பெயரை விஜய் விஷ்வா என்றும் மாற்றிக் கொண்டார்.
மிர்ணா தன்னை இளமையாக காட்ட சில ஊசிகள் போட்டதாகவும், 4 முறை அபாஷன் செய்தார் என்றும் அபி சரவணன் பகிர் குற்றச்சாற்றுகளை முன்வைத்தார். மிர்னா தற்போது வரை அபி சரவணனுக்கு விவகாரத்து கொடுக்காமல் அலைக்கழித்து வருகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.