ரியாலிட்டி ஷோவில் ஜெயிலர் கிளைமாக்ஸ்’ஐ நடித்து காட்டிய சூப்பர் ஸ்டார்.. மாஸ் வீடியோ இதோ..!

Author: Rajesh
20 August 2023, 3:50 pm

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்போது சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். பீஸ்ட் பட தோல்விக்கு பிறகு இப்படம் செம கம்பேக் ஆக அமைந்துள்ளது. ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மிர்ணா, மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் பலர் நடிப்பில் வெளியான இப்படம் திரையரங்குகளில் வெற்றி நடைபெற்று வருகிறது.

காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட் என கலந்த கலவையாக ஜெயிலர் திரைப்படம் அமைந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. ரஜினியின் ஸ்டைல், நெல்சனின் டார்க் காமெடி, அனிருத் இசை என பக்கா காம்போவாக அமைந்துள்ளது. பாசிட்டிவ் ரிவியூ பெற்று வரும் இத்திரைப்படம், இரண்டே நாட்களில் நூறு கோடி வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது.

குறிப்பாக இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அனைவராலும் புகழ்ந்து பேசப்பட்டு வருகிறது. ஒரே காட்சியில் ரஜினி, மோகன்லால், சிவராஜ்குமார் மிரட்டிவிட்டனர். இந்நிலையில், கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ஜெயிலர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தான் நடித்ததை அப்படியே நடித்து அசத்தியுள்ளார் சிவராஜ்குமார்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..

https://twitter.com/kadalaimuttaai/status/1692937117436166301?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1692937117436166301%7Ctwgr%5Efede76a375524ad36105d380025b8e0612a4c426%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fshivaraj-kumar-acted-jailer-climax-in-television-1692508712
  • கைதி 2 ட்ராப்? அப்போ அவரும் அவுட்டா? முக்கிய பிரபலத்துடன் இணையும் கார்த்தி!