இனி இபிஎஸ்சை புரட்சி தமிழர் என்றே அழைக்க வேண்டும்… மதுரை மாநாட்டில் புதிய பட்டம் சூட்டிய அதிமுகவினர்!!!

Author: Udayachandran RadhaKrishnan
20 August 2023, 6:57 pm

அதிமுகவின் மாநில மாநாடு மதுரையில் இன்று நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் பின் நடைபெறும் மிகப்பெரிய கூட்டம் இது. மாநிலம் முழுவதும் அதிமுகவினர் மாநாட்டுக்கு திரளும் வகையில் அதிமுக நிர்வாகிகள் விரிவான ஏற்பாடுகளை செய்து இருந்தார். மதுரை ரிங்ரோடு பகுதியில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 63 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சுமார் 2 லட்சம் பேர் கலந்து கொள்ளும் விதமாக இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்கும் அதிமுக தொண்டர்களுக்கு சுடச்சுட உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டம் தொடங்கியதில் இருந்து காலை முதல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 6 மணியளவில் எடப்பாடிபழனிசாமி பேசினார்.

முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு ” புரட்சிதமிழர்” என்றபட்டம் வழங்கப்பட்டுள்ளது. சர்வ சமய பெரியோர்கள் இந்த பட்டத்தை எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்ததாக அதிமுக நிர்வாகி வைகை செல்வன் அறிவித்தார். மேடையிலேயே புரட்சி தமிழர் என வைகை செல்வன் மூன்று முறை உச்சரித்தார். மேலும் இந்த பட்டத்திலேயே இனி அதிமுகவினர் அழைக்க வேண்டும் என்று வைகை செல்வன் கோரிக்கை விடுத்தார்.

  • Sundar C new movie மார்க்கெட்டே இல்லை…சுந்தர் சி-யிடம் சரணடைந்த வாரிசு நடிகர்.!