கோயில் குண்டம் திருவிழாவில் தீ மிதிக்க குழந்தையுடன் இறங்கிய பெண்.. தவறி விழுந்த சோகம்.. பதைக்க வைத்த வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2023, 11:52 am

கோயில் குண்டம் திருவிழாவில் தீ மிதிக்க குழந்தையுடன் இறங்கிய பெண்.. தவறி விழுந்த சோகம்.. பரபரப்பு காட்சி!!

மன்னார்குடியில் கோவில் திருவிழாவில் தீ மிதித்த பெண் குழந்தையுடன் தீ குழியில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடி சத்ய மூர்த்திமேட்டுதெருவில் உள்ள ஏழை மாரியம்மன் கோவிலில் கடந்த 18 ஆம் தேதி முதல் திருவிழா நடைபெற்று வருகிறது.

இன்று மதியம் மன்னார்குடி திருப்பாற்கடல் குளக்கரையில் இருந்து பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் பால்குடம், காவடி, எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

மாலையில் பால்குட ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது. பின்னர் கோவில் வாசலில் அமைக்கப்பட்டிருந்த தீக் குழியில் பக்தர்கள் இறங்கி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

அப்போது சத்ய மூர்த்தி மேட்டு தெருவை சேர்ந்த உமா என்ற பெண் தனது 5 வயதுடைய பேத்தியை இடுப்பில் சுமந்து தலையில் பால்குடத்துடன் திக்குளியில் இறங்கினார். அப்போது கால் இடறி அந்த பெண் குழந்தையுடன் தீ குழியில் விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக குழந்தை மற்றும் பெண்ணை மீட்டனர்.

https://vimeo.com/856308496?share=copy

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக குழந்தை மற்றும் பெண் இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். கோவில் திருவிழாவில் குழந்தையுடன் பெண் ஒருவர் தீக்குழியில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி காண்பவர்களை பதைபதைக்க வைக்கிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 421

    0

    0