நடிகர் பிரகாஷ் ராஜின் இந்திய அடையாளங்கள் பறிக்கப்பட வேண்டும் ; காவல்நிலையத்தில் நாடார் சங்கத்தினர் பரபரப்பு புகார்…!!

Author: Babu Lakshmanan
22 August 2023, 7:42 pm

பிரகாஷ்ராஜ் இந்தியராக இருக்க தகுதி இல்லை என்றும், இந்திய விஞானிகளை கேலி செய்வது இந்தியர்களை கேலி செய்வதற்கு சமம் என்று தமிழ்நாடு நாடார் சங்கத்தலைவர் முத்துரமேஷ் தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் விக்கிரம லேண்டர் எடுத்த புகைப்படம் என்று பதிவிட்ட கேலிச்சித்திரம் இந்திய விஞ்ஞானிகளை கிண்டல் செய்யும் விதமாக இருப்பதாகவும், அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையரிடம் தமிழ்நாடு நாடார் சங்கத்தினர் புகார் அளித்தனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ் பேசியதாவது:- நேற்று பிரகாஷ் ராஜ் வெளியிட்ட புகைப்படம் இந்திய மக்கள், விஞ்ஞானிகள், இஸ்ரோ தலைவர் அனைவரையும் கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டு இருக்கிறது. இவர் வெளியிட்ட புகைப்படம் நிலாவில் இஸ்ரோ தலைவர் டி ஆத்துவது போல இருக்கிறது, இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல்.

பிரகாஷ்ராஜின் இந்திய அரசால் வழங்கபட்ட அனைத்து அடையாளங்களையும் இந்திய அரசு பறித்து கொள்ள வெண்டும். அவர் இந்தியர் என்பதற்கு தகுதியற்றவர். நாடார் சங்க தலைவர் முதுரமேசு அளித்த புகார் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று வாக்குறுதி அளித்துள்ளார், என தெரிவித்துள்ளார்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!