விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்க வேண்டி பிரார்த்தனை ; திருப்பரங்குன்றத்தில் விநாயகருக்கு 108 அபிஷேகம் செய்து வழிபாடு..!!

Author: Babu Lakshmanan
23 August 2023, 12:44 pm

இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திராயன் 3யின் லேண்டர் இன்று நிலவில் நல்ல படியாக தரையிறங்க திருப்பரங்குன்றத்தில் விநாயகருக்கு 108 அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

இஸ்ரோவிலிருந்து சந்திரனுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன் 3ன் விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்க உள்ளது. இதனை உலகம் முழுவதும் உள்ள மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், விக்ரம் லேண்டர் நல்ல முறையில் நிலவில் தரையில் இறங்க வேண்டி திருநகர் ஸ்ரீ மங்கள விநாயகர் பக்தஜன சபையின் சார்பாக திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் உள்ள வெற்றி விநாயகருக்கு சரவண பொய்கையில் இருந்து 108 குடங்கள் தண்ணீர் ஊற்றி பால், பன்னீர், மஞ்சள், சந்தனம் மற்றும் கோடி தீர்த்தம் அபிஷேகங்களும் மற்றும் கூட்டுப் பிரார்த்தனைகளும் நடைபெற்றது.

முடிவில் நிலவில் உள்ள சந்திராயன் 3, விக்ரம் லேண்டருக்கு எலுமிச்சை பழ திருஷ்டி சுத்தி போடப்பட்டது. ஸ்ரீ மங்கள விநாயகர் பக்தி ஜன சபையின் நிர்வாகிகள் மணிக்கலை அரசன் ஸ்ரீ பாரத், ஸ்ரீ சாஸ்தா, முத்து, அங்குசாமி ராஜசேகர், பழனிச்சாமி கலந்து கொண்டனர்.

  • Jana Nayakan Vijay ஜனநாயகன் கடைசி படம் அல்ல… சம்பவம் LOADING : இயக்குநரின் மாஸ் அறிவிப்பு!