தலையணையை வைத்து அழுத்தி மனைவி கொலை… தூக்குபோட்டு கணவன் தற்கொலை ; கோவையை உலுக்கிய சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
23 August 2023, 12:54 pm

கோவை ; பொள்ளாச்சி அருகே போடிபாளையம் பகுதியில் மனைவியை கொன்று கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி பஞ்சாயத்து உட்பட்ட போடிபாளையம் பகுதியில் சென்னியப்ப பிள்ளை தோட்டம் என்ற தோட்டத்து சாலையில் காளிமுத்து, ராஜேஸ்வரி இருவரும் கடந்த ஒரு வருடமாக பண்ணைய வேலை பார்த்துக் கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இறந்தவர்களின் மகள் கவிதாமணி என்பவர் கோவையில் கணவருடன் வசித்து வருகிறார். கடந்த 9 மாதங்களாக கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால், இறந்து போன ராஜேஸ்வரி கோவையில் உள்ள தனது மகள் வீட்டில் இருந்து கொண்டு சுகுணா பள்ளியில் ஆயாவாக வேலை பார்த்து இருந்து வந்துள்ளார்.

நேற்று மதியம் கணவர் காளிமுத்து தனது மகள் வீட்டுக்கு சென்று தனது மனைவியை சமாதானம் செய்து, தோட்டத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

இரவு 9 மணிக்கு மேல் மீண்டும் இருவருக்குள்ளே வாக்குவாதம் ஏற்பட்டதால், மனைவியை தலையணையை வைத்து அழுத்தி கொன்று விட்டு, காளிமுத்துவும் தூக்குபோட்டு தற்கொலை செய்து உள்ளார். இந்த சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?