அடுத்த குறிக்கோள்… சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு பிரதமர் மோடி சொன்ன வாழ்த்து.. நெகிழ்ச்சியில் இஸ்ரோ!!!
Author: Udayachandran RadhaKrishnan23 August 2023, 7:15 pm
அடுத்த குறிக்கோள்… சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு பிரதமர் மோடி சொன்ன வாழ்த்து.. நெகிழ்ச்சியில் இஸ்ரோ!!!
உலகிலேயே முதல் நாடாக நிலவின் தென்துருவத்தை ஆராய, ரூ.615 கோடி செலவில் விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், திட்டமிட்டபடி ‘சந்திரயான் 3’ விண்கலம் நிலவில் தரையிறங்கியது. கடந்த ஜூலை 14ல் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், நிலவின் தென்துருவத்தை நோக்கி இன்று மாலை 5.44 மணிக்கு பயணிக்க தொடங்கியது.
அதன்படி, 8 கட்டங்களாக குறைக்கப்படும் பணி வெற்றிகரமாக நடைபெற்று, சரியாக 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது. இதன் மூலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற வரலாற்று சாதனையை இந்தியா படைடைத்துள்ளது.
இந்நிலையில், நிலவில் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு, பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றியபோது பேசிய அவர் “சந்திரயான் -3 வெற்றி பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இஸ்ரோ குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த நேரத்தில் 140 கோடி இந்தியர்களையும் வாழ்த்துகிறேன்.
இதற்கு முன் எந்த நாடும் அங்கு சென்றதில்லை. நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பு மூலம் அங்கு சென்றடைந்துள்ளது. இந்திய விண்வெளி நிறுவனம் மற்றும் விஞ்ஞானிகளின் வெற்றியின் வரலாற்று தருணத்தை இன்று உலகம் கண்டுள்ளது. இந்தியாவின் வருங்கால வளர்ச்சியின் உதயமாக இச்சாதனை திகழ்கிறதுவிஞ்ஞானிகளுக்கு கோடானகோடி நன்றி. புதிய இந்தியா உருவாகியுள்ளது மற்றும் இந்தியர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் பெருமிதம் பொங்குகிறது.
சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்ற நிலையில் புதிய இந்தியா உருவாகியுள்ளது இந்தியாவின் காலடி நிலவில் பதிந்திருப்பது ஒட்டுமொத்த நாட்டையும் உற்சாகமடைய வைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சரித்திர சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.இந்த வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் கிடைத்த வெற்றி என்று கூறுவேன். அடுத்ததாக நிலவுக்கு மனிதனை அனுப்புவதுதான் திட்டம். சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 விண்கலம் விரைவில் அனுப்பப்படும்’” என மோடி தெரிவித்துள்ளார்.