வீடு புகுந்து பெண் வெட்டிப் படுகொலை… மர்ம நபர்கள் வெறிச்செயல் ; போலீசார் விசாரணை..!!
Author: Babu Lakshmanan24 August 2023, 11:02 am
புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்லன்புரம் பகுதியில் சுப்பம்மாள் (47) என்ற பெண் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 23 வயதில் அருண்பாண்டியன் என்ற மகனும், 19 வயதில் ஹரிணி என்ற மகளும் உள்ளனர். கணவர் பிரம்மன் கண் பார்வையற்றவர்.
அவர்களது வீட்டில் மின்சாரம் இல்லாத காரணத்தால் இறந்து போன சுப்பம்மாளின் மகள் ஹரிணி, கணவர் பிரம்மன் ஆகியோர் பிரம்மன் தங்கை வீட்டில் வசித்து வந்தனர்.
இறந்த சுப்பம்மாளின் மகன் அருண் பாண்டியன் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில் உள்ள டூவீலர் மெக்கானிக்காகவேலை பார்த்து வருகிறார். இந்த பெண்மணியை எதற்காக கொலை செய்தார்கள் என்ற பல கோணங்களில் அறந்தாங்கி காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இறந்தவரின் உடலை உடல் குறு ஆய்வுக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.