சிக்ரெட் ஸ்டைலே அப்பட்டமான காப்பி தான்….. ரஜினியை மரணபங்கமாய் கலாய்த்த மன்சூர் அலிகான்!
Author: Shree24 August 2023, 12:49 pm
தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் 90ஸ் காலகட்டத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் ஹீரோவை மிரட்டி எடுத்தவர். இவர் வில்லனாகவும், குணசித்திர நடிகராவும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து பெரிதும் புகழ் பெற்றார். குறிப்பாக கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இவரது வில்லத்தனமான நடிப்பு தமிழ் சினிமாவையே மிரள வைத்தது.
இதனிடையே அரசியல் பக்கம் தலைகாட்டினார். அவ்வப்போது சர்ச்சையாக எதையேனும் பேசி வம்பில் சிக்குவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதனிடையே அவ்வப்போது கிடைக்கும் படவாய்ப்புகள் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்ப்போது விஜய்யின் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரமொன்றில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து மனம் திறந்து பேசிய மன்சூர் அலிகான், ரஜினியின் படங்களில் நான் நடித்துள்ளேன். அவர் உண்மையில் நல்ல மனிதர் தான். கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். திறமையான நடிகர். ஆனால், ரசிகர்கள் கொண்டாடும் அவரின் சிக்ரெட் பிடிக்கும் ஸ்டைல் சத்ரவன் சின்னாவின் ஸ்டைல். அவரை பார்த்து தான் ரஜினி காப்பியடித்தார்.
ரஜினி நல்லவர் தான். ஆனால் சுயமாக சிந்திக்கமாட்டார். சமீபகாலமாக அவரை பின்னால் இருந்து சிலர் இயக்குகிறார்கள். தமிழ்நாட்டுல சம்பாதிச்ச பணம் எல்லாத்தையும் கொண்டுபோய் கர்நாடகாவில் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார். அங்கு இவரை சிலர் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். ரஜினி இங்கு வேளையில்லாத 1 லட்சம் பேருக்கு வேலைக்கொடுக்கலாம். ஆனால் செய்யமாட்டார். காரணம் அவர் பணக்காரர்கள் பக்கம்தான் இருப்பார். ஏழைகளின் பக்கம் நிற்கமாட்டார். அவரெல்லாம் அரசியலுக்கு லாய்க்க இல்லை. அரசியலில் அவர் ஒரு சுண்டைக்காய்” என்று மோசமாக விமர்சித்து பேசியுள்ளார் மன்சூர் அலிகான்.