முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியிடம் குடும்பத்துடன் ஆசி பெற்ற அதிமுக நிர்வாகி..!!

Author: Babu Lakshmanan
24 August 2023, 4:19 pm

கோவை ; அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித்த கோவை புறநகர் மாவட்ட நிர்வாகி குடும்பத்துடன் ஆசி பெற்றார்.

அதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளராக பொறுப்பு வகித்து வருபவர் வினோத் குமார். கடந்த ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவைக்கு வருகை தந்திருந்தார். அப்போது, வினோத் குமார் – சங்கீதா தம்பதியினரின் மகளுக்கு இதயதெய்வம் என்ற வார்த்தையில் உள்ள முதல் வார்த்தையான ‘இதயா’ என்று பெயர் சூட்டி வைத்தார்.

இந்த நிலையில், தனது திருமண நாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சரும், தொண்டமுத்தூர் தொகுதி எம்எல்ஏவுமான எஸ்பி வேலுமணியை சந்தித்த அதிமுக நிர்வாகி வினோத் குமார், தனது மனைவி சங்கீதா மற்றும் மகள் இதயாவுடன் ஆசி பெற்றார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?