அப்பா கண் எதிரே பாலியல் தொல்லை… கசப்பான அனுபவத்தை கூறி கொந்தளித்த சர்ச்சை நடிகை!

Author: Shree
25 August 2023, 12:14 pm

சர்ச்சைக்குரிய மற்றும் கவர்ச்சி நடிகையான கஸ்தூரி 90களில் நடித்து பேமஸ் ஆனார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1992 ‘மிஸ் மெட்ராஸ்’ அழகிப் போட்டியில் கலந்துக்கொண்டு வென்றுள்ளார். பின்னர் முதல் ஆத்தா உன் கோயிலிலே படத்தில் நடித்து அறிமுகமாகி ராசாத்தி வரும் நாள் , சின்னவர் , செந்தமிழ்ப் பாட்டு , அமைதிப்படை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது 48 வயதாகும் கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்துக்கொண்டார். இவர் 2000 ஆம் ஆண்டு ரவிகுமார் என்ற மருத்துவரை திருமணம் செய்தார். திருமணமாகியதும் கணவர் வெளிநாட்டில் வேலையை பார்த்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள்.

தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் அவ்வவ்போது படுகவர்ச்சியாக போட்டோக்களை வெளியிட்டு வரும் கஸ்தூரி தற்போது தனக்கு நடந்த பாலியல் சீண்டல் குறித்து வெளிப்படையாக பேசியிருகிறார். ” நான் என் அப்பாவுடன் நடிகர் சங்க விழாவுக்கு சென்றிருந்தேன்.

அந்த நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்தபோது கூட்ட நெரிசல் அதிமாக இருந்தது. அப்போது ஒரு நபர் என்னுடைய பின் பக்கத்தில் கிள்ளினான். உடனே அவன் கையை மடக்கி பிடித்து முன்பக்கமாக இழுத்து முறுக்கினேன். உடனே அவன் வலியால் சிஸ்டர் சிஸ்டர் மன்னிச்சிடுங்க என கத்தி துடித்தான். அது மிகவும் மோசமான அனுபவம் என கஸ்தூரி கூறியுள்ளார்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!