தினமும் குடித்துவிட்டு தகராறு செய்த தந்தை… பொறுமையிழந்த மகன் : இறுதியில் நடந்த பரிதாபம்.. வேலூரில் அதிர்ச்சி..!!

Author: Udayachandran RadhaKrishnan
25 August 2023, 1:49 pm

தினமும் குடித்துவிட்டு தகராறு செய்த தந்தை… பொறுமையிழந்த மகன் : இறுதி நடந்த பரிதாபம்.. வேலூரில் அதிர்ச்சி..!!

வேலூர் கொசப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் வயது 63 இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகன் சரத்குமார் சென்னையில் தனியார் ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

நேற்று விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ளார். எப்போதும் குடித்துவிட்டு தகராறு செய்து கொண்டிருந்த தந்தையிடம் பொறுப்பாக இருக்க மாட்டீர்களா எப்போதும் குடித்துக் கொண்டுதான் இருப்பீர்களா என்று கேட்டிருக்கிறார்.

நீ யார் என்னை கேட்பதற்கு என்று ஒருவருக்கொருவர் கேள்விக்கணையால் தாக்கிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் அது ஆபாசமாக பேச்சாக மாறி கைகலப்பில் முடிந்து இருக்கிறது.

எப்போதும் பொறுப்பற்று இருக்கும் தந்தையின் குடிகார தன்மையை சகித்துக் கொள்ளாத மகன் சரத்குமார் அருகில் இருந்த கத்தியை எடுத்து தந்தையின் கழுத்தில் ஓங்கி குத்தியுள்ளார்.

பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளார். குத்துப்பட்ட தந்தை தேவராஜ் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்துள்ளார். தப்பி ஓடிய சரத்குமாரை வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தந்தையே மகனே குத்தி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 420

    0

    0