சாவித்திரியை காப்பாத்த ஜெமினியை கெட்டவரா காட்டுறீங்களா? உண்மையை உடைத்த பிரபல மருத்துவர்..!
Author: Vignesh26 August 2023, 11:33 am
சாவித்ரி கணேஷ் ஆந்திர பிரதேசத்தில் குண்டூரில் பிறந்தவர். இயற்பெயர் சரசவாணி தேவி இவர் இளம் வயதிலேயே படங்களில் நடிக்க தொடங்கினார். 1952 ஆம் ஆண்டு இவர் ஜெமினி கணேசனை மணந்தார். 19 மாதங்களாக கோமா என்னும் ஆள் மயக்க நிலையில் இருந்த சாவித்திரி 1981 ஆம் ஆண்டு இறந்தார்.
அப்போது, அவருக்கு வயது 45 அவருக்கு நீரிழிவு நோயும் உயர் ரத்த அழுத்தமும் இருந்தன. இந்திய அரசு அவரது நினைவாக 2011 ஆம் ஆண்டு நினைவுத்தபால் ஒன்றையும் வெளியிட்டது.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் பல பிரபலங்களின் ரகசியங்களை செய்திகளாக பேட்டி மூலம் தெரிவித்து வருபவர் டாக்டரும் சினிமா விமர்சகருமான காந்தராஜ் சமீபத்தில், அளித்த பேட்டி ஒன்றில் சாவித்ரியை திருமணம் செய்து நன்றாக வாழ்ந்து வந்த நிலையில், ஒரு சில கருத்து வேறுபாட்டால் இருவரும் பிறிந்தனர்.
அதன் பின்னர் அவர்களுக்குள் என்ன நடந்தது என்பது பற்றி மகாநதி படத்தில் காட்டியிருப்பார்கள். போலியாக ஜெமினி கதாபாத்திரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், உண்மையில் சாவித்ரியால் தான் ஜெமினி அதிகமாக பாதிக்கப்பட்டதாகவும், சாவித்திரி ஜெமினியை பற்றி எனக்கு நன்றாக தெரியும். யாரை கேட்டு அப்படி எடுத்தார்கள் என்று பட குழுவினரை தான் கேட்டதாகவும் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.
ஜெமினியை அப்படி படத்தின் காட்டியதெல்லாம் அயோக்கியத்தனம் என்றும், சாவித்திரி தெலுங்கு என்பதால் அவரை காப்பாற்ற அப்படி எடுத்தார்களா என்று டாக்டர் காந்தராஜ் பேட்டியில் கடுமையாக விமர்சித்துள்ளார்.