வேட்டையனை பார்த்தால் லவ் ஃபீலிங் வருது.. பிரபல இயக்குனரிடம் வெளிப்படையாக பேசிய ரஜினியின் மனைவி..!
Author: Vignesh26 August 2023, 12:55 pm
தமிழ் சினிமாவில் வெளிவந்த பேய் படங்களுக்கே தலைவர் ” சந்திரமுகி’ படம் தான். 2005ம் ஆண்டு வெளிவந்த இப்படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மரணபீதியிலும் மகழ்ச்சி அடையவைத்தது. இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்த சந்திரமுகி திரைப்படம் கிட்டத்தட்ட 200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. மேலும் 250 நாட்களையும் கடந்து, இத்திரைப்படம் 650 கோடி வரை வசூலை ஈட்டி திரையரங்குகளில் ஓடி மாபெரும் சாதனையை படைத்தது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் ‘சந்திரமுகி 2’ படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், ஒய். ஜி. மகேந்திரன், ரவி மரியா, சுரேஷ் மேனன், விக்னேஷ், சாய் அய்யப்பன், சத்ரு, டி. எம். கார்த்திக், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே , சுபிக்ஷா கிருஷ்ணன் என மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள்.
இந்நிலையில், இயக்குனர் பி வாசு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சந்திரமுகி படத்தை பார்த்துவிட்டு நான்கு வாரம் கழித்து ரஜினியின் மனைவி லதா தனக்கு கால் செய்திருந்ததாகவும், அப்போது தன்னிடம் நான் எவ்வளவோ படங்களை பார்த்துள்ளேன்.
ஆனால், வேட்டையனை பார்த்தால் லவ் பண்ணனும் என்கிற ஃபீலிங் இருக்குது, அந்த கேரக்டரை பெரிதாக பண்ணுங்கள் என்று கூறினாராம், நானும் அதை அப்பவே பண்ணுகிறேன் என்று சொல்லியிருந்தேன். ஆனால், சந்திரமுகி படத்தின் தொடர்ச்சி இரண்டாம் பாகம் என்று சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார்.