விடாமுயற்சி ட்ராப் ஆ?.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்.. குஷியில் ரசிகர்கள்..!

Author: Vignesh
26 August 2023, 3:45 pm

தமிழ் திரையுலகில் டாப் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் AK62. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டு பின்னர், அவரது கதை பிடிக்காததால் AK62 மகழ் திருமேனியிடம் கொடுக்கப்பட்டது.

இப்படம் ஆரம்பிக்கப்பட்டு 3 மாதங்களாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தனர். பின்னர், அஜித்தின் பிறந்தநாள் அன்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் AK62 டைட்டில் “விடாமுயற்சி” என அறிவிக்கப்பட்டது.

இப்படத்தில் த்ரிஷாவை கமிட் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், ஷூட்டிங் தள்ளிப்போகவே, த்ரிஷா வேறு சில படங்களில் கமிட் ஆனதாக சொல்லப்படுகிறது. இன்னும் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என தெரியாத நிலை நிலவி வருவதால், தயாரிப்பு நிறுவனமான லைகா கடும் அப்செட் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், லைக்கா சுபாஸ்கரன் சந்திரமுகி 2 பட விழாவில் பேசும்போது விடாமுயற்சி பட வதந்திகள் பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறார், விடாமுயற்சி சூட்டிங் விரைவில் தொடங்கும் என்றும், விடாமுயற்சி ட்ராப் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் அனைத்து வதந்திகளுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!