கோவை மாநகராட்சிக்கு மத்திய அரசின் விருது… விதை போட்டதே நாங்க தான் ; முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பெருமிதம்..!!

Author: Babu Lakshmanan
26 August 2023, 5:06 pm

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவை மாநகராட்சிக்கு முதலிடம் பிடித்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக X வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், சுற்றுச்சூழலை சிறப்பாக கட்டமைத்தற்காக கோயம்புத்தூருக்கு முதல் பரிசு கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

திமுக அரசு கோவையில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாமல் முற்றிலுமாக புறக்கணித்து வருவதை நானும், அண்ணன் எடப்பாடியார் அவர்களும் பல முறை சுட்டிக்காட்டி வந்தோம். நீண்ட கால தாமதத்திற்கு பிறகு ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அஇஅதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் வாயிலாக கோவையில் பல்வேறு வளர்ச்சிக்கு வழிவகை செய்யப்பட்டது. தற்போது மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சுற்றுச்சூழலை சிறப்பாக கட்டமைத்தற்கான தரவரிசையில் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டம் முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

கோவைக்கு இச்சிறப்பை பெற்றுத்தந்தமைக்காக, கோவை மக்கள் சார்பாக புரட்சித் தலைவி அம்மா மற்றும் புரட்சித் தமிழர் அண்ணன் திரு. எடப்பாடியார் ஆகியோருக்கு மீண்டுமொருமுறை என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திமுக அரசு இனிமேலும் கால தாமதம் செய்யாமல், கோவையில் நடைபெற்று வரும் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Tamil actress Sana Khan updates பிரபல நடிகை மீண்டும் கர்ப்பம்..கோலிவுட்டில் பரபரப்பு..!
  • Views: - 340

    0

    0