இது போதுமா இன்னும் வேணுமா? குண்டு பொண்ணுன்னு சொன்னவங்களுக்கு பளார் பதில் கொடுத்த மஞ்சிமா!
Author: Shree27 August 2023, 9:07 am
வாரிசு நடிகரான கௌதம் கார்த்திக் மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு மீனவனாக அப்படத்தில் நடித்த கெளதம் கார்த்திக் முதல் படத்திலே மக்கள் அனைவ்ருக்கும் பரீட்சியமான முகமாக பார்க்கப்பட்டார்.
அதன் பிறகு சிப்பாய், என்னமோ ஏதோ, வை ராஜா வை, தேவராட்டம், இந்திரஜித் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இந்த படங்கள் பெரிதாக வரவேற்பு இல்லாததால் மார்க்கெட் இழந்தார். தேவராட்டம் படத்தில் நடித்தபோது அப்படத்தின் கதாநாயகி மஞ்சிமா மோகனுடன் ஏற்பட்ட நெருக்கம் பின்னாளில் காதலாக மாறியது.
தொடர் பிளாப் படங்களை கொடுத்து தோல்வியடைந்த நேரத்தில் மஞ்சிமா மட்டும் தான் என்னுடன் இருந்தார். அது தான் எங்கள் காதல் வலுவடைய காரணமாக இருந்தது என பேட்டியில் கூறியிருந்தார். பின்னர் இருவரும் தங்களது பெற்றோர்கள் ,சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்தின் போது மஞ்சிமாவின் உடல் எடை குறித்து பல கேலி, கிண்டல்கள் சமூகவலைத்தளங்களில் பரவலாக பரவியது.
அதுமட்டும் அல்லாமல் கெளதம் கார்த்திக் சொந்தக்காரர்கள். நீ அவனுக்கு பொருத்தமான ஜோடி இல்லை என கிண்டல் அடித்ததாக கூட செய்திகள் வெளியானது. இதெயெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாத மஞ்சிமா எப்போதும் போலவே தனது உடல் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்தி ஜிம் ஒர்க் அவுட் செய்யும் போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் தற்போது அழகான வெள்ளை நிற சேலையில் கார்ஜியஸ் அழகியாக எடுத்துக்கொண்ட சில லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தன்னை குண்டு என விமர்சித்த அத்தனை பேருக்கும் தனது நேச்சுரல் அழகை காட்டி பதிலடி கொடுத்து வசீகரித்துவிட்டார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.