சபரிமலை கோவில் நடை திறப்பு : முன்பதிவு செய்ய ஏற்பாடு.. தேதியுடன் தேவசம் போர்டு முக்கிய அறிவிப்பு!!!
Author: Udayachandran RadhaKrishnan27 August 2023, 10:16 am
சபரிமலை கோவில் நடை திறப்பு : முன்பதிவு செய்ய ஏற்பாடு.. தேதியுடன் தேவசம் போர்டு முக்கிய அறிவிப்பு!!!
கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஓணம் பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிலையில், திருவோண பண்டிகையை ஒட்டி, சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை இன்று (ஞாயிற்மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
இன்று முதல் 31ஆம் தேதி வரை பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்படவுள்ளன. தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளதாக திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘
இதனையொட்டி சிறப்பு பூஜையில் கலந்துகொள்வதற்காக பக்தர்களுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது.