துணிக்கடை மேலாளரின் பைக்கை இலாவகமாக திருடிய நபர்… வெளியான சிசிடிவி காட்சி… போலீசார் விசாரணை..!!

Author: Babu Lakshmanan
28 August 2023, 11:05 am

பழனியில் துணிக்கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடை மேலாளரின் இரு சக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலைய சாலையான ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள பீட்டர் இங்கிலாந்து என்கிற துணிக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் மேலாளராக கோட்டைமேட்டை சேர்ந்த அப்துல் சமது என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமையும் கடை என்பதால், பொதுமக்கள் இன்றி சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

கடையின் முன்பு மேலாளர் அப்துல் சமது இருசக்கர வாகனத்தை வழக்கம் போல் நிறுத்தி இருந்த நிலையில், மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தின் முன்பு நின்று கொண்டிருப்பதும், பின்னர் லாவகமாக அந்த வண்டியை எடுத்து சென்றுவிட்டார். பின்னர் இருசக்கர வாகனத்தை எடுக்க வந்த மேலாளர் இருசக்கர வாகனத்தை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

https://player.vimeo.com/video/858531278?badge=0&autopause=0&player_id=0&app_id=58479

உடனடியாக அருகில் இருந்த துணிக்கடையின் கேமராவை பரிசோதித்து பார்த்தபோது, மர்ம நபர் ஒருவர் திருடி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து பழனி நகர காவல் துறையினரிடம் சிசிடிவி காட்சிகளை வைத்து புகார் அளித்துள்ளார். பகல் நேரத்திலேயே இருசக்கர வாகனத்தை மர்மநபர் ஒருவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்கள் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…