“விடாமுயற்சி” இயக்க கையெழுத்து போட்ட சஞ்சய்… அவரின் முதல் ஹீரோ அஜித்தா?
Author: Shree29 August 2023, 12:54 pm
நடிகர் விஜய்யின் மகன் சீசன் சஞ்சய் சினிமா மேக்கிங் படைப்பை முடித்துவிட்டு இயக்குனராக வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்து வந்தார். அதற்கான சரியான நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்த அவர் நேற்று லைக்கா நிறுவனம் தறிக்கும் அடுத்த படத்தில் இயக்குனராக ஒப்பந்தமாகியுள்ளார். அதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகியது.
இவர் ஏற்கனவே, தனது தந்தை விஜய்யுடன் இணைந்து வேட்டைக்காரன் படத்தில் கூட நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு தன் மகன் ஹீரோவாக வேண்டும் என்று தான் ஆசைபட்டாராம். அதற்காக ஷங்கர், முருகதாஸ், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட மிகப்பெரிய வெற்றி இயக்குனர்களிடம் பேசி ஒப்புதல் வாங்கிவிட்டாராம். ஆனால், மகன் சஞ்சய்யோ தனக்கு நடிப்பதில் கொஞ்சம் கூட ஆர்வமே இல்லை. இயக்குனராக தான் ஆவேன் என விடாப்பிடியாக நின்றார்.
இதனால் விஜய் சரி… நீ படம் தானே இயக்கனும் கதை தயார் பண்ணிட்டு சொல்லு நானே அந்த பட்டதில் ஹீரோவாக நடிக்கிறேன் என கூறினாராம். இதனால் கடுப்பான சஞ்சய்… என்னுடைய கதைக்கு யார் பொருத்தமாக இருப்பார்கள். யாரை தேர்வு செய்யலாம் என எல்லாவற்றையும் நானே பார்த்துக்கொள்கிறேன் என கூறினாராம். சரி…. அட்லீஸ்ட் ஒரு கெஸ்ட் ரோல் ஆவது கொடுப்பா. நான் நடித்தால் படம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகும். உன்னுடையே ஆரம்பமே சிறந்ததாக இருக்கும். அதே நேரத்தில் எனக்கும் மகனின் இயக்கத்தில் நடிக்கவேண்டும் என ஆசை இருக்காதா? என சொல்லி வாய்ப்பு கேட்டாராம் விஜய்.
அதற்கு சஞ்சய்… அப்பா ப்ளீஸ்பா என்னை விடுங்க…. நீங்க உங்க லைன்ல போங்க, நான் என் லைன்ல போறேன். ஒரு அப்பாவா நீங்க எனக்கு சப்போர்ட்டா இருந்தா மட்டும் போதும் என கூறி பேச்சை நிப்பாட்டிகொண்டாராம். அதன் பின்னர் தான் மகனுக்கு லைக்கா நிறுவனத்திடம் இயக்குனராக சான்ஸ் வாங்கி கொடுத்துள்ளார் விஜய். அவர் கையெழுத்திட்ட முதல் திரைப்படமே அஜித்தின் விடாமுயற்சி படம் தான் என செய்தி ஒன்று சமூகவலைத்தளத்தில் உலா வந்துக்கொண்டிருக்கிறது. அண்மையில் கூட லைக்கா நிறுவனம் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கப்படும் என அந்நிறுவனர் சுபாஸ்கரன் கூறியிருந்த நிலையில் நேற்று விஜய் மகன் லைகா நிறுவனத்துடன் இணைந்திருப்பது ஒரு வேலை இருக்குமோ? என சந்தேகிக்கப்படுகிறது.