11 வழக்குகளையும் நீக்குங்க… ஹெச் ராஜா வைத்த கோரிக்கை : உயர்நீதிமன்றம் போட்ட பரபரப்பு உத்தரவு!!
Author: Udayachandran RadhaKrishnan29 August 2023, 1:42 pm
பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்குகளை நீக்க கோரி அவர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.
கடந்த 2018 முதல், அவரது டிவிட்டர் (தற்போது எக்ஸ் சமூக வலைத்தளம்) பக்கத்தில் பெரியார் சிலையை உடைப்பது என கருத்து வெளியிட்டது. திமுக எம்பி கனிமொழி பற்றி விமர்சித்தது, பெண் அரசு ஊழியர்கள் பற்றி விமர்சித்தது என எச்.ராஜா மீது 11 வழக்குகள் காவல்நிலையத்தில் பதியப்பட்டன.
இந்த வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டு பதியப்பட்டது எனவே அவற்றை நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் எச்.ராஜா தரப்பில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
அதே போல, இந்த வழக்குகளை நீக்க கூடாது. எச்.ராஜா தொடர்ந்து பெண்கள் பற்றி அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்து வருகிறார் என காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
இதனை ஏற்று, எச்.ராஜா மீதான வழக்குகளை நீக்க முடியாது என உத்தரவிட்டு, எச்.ராஜா தரப்பில் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இதனால் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளன.