பஸ் கண்டக்டர் ஆக வேலை பார்த்த டிப்போவை சுற்றிப்பார்த்த சூப்பர் ஸ்டார் – வைரலாகும் போட்டோஸ்!

Author: Shree
29 August 2023, 2:42 pm

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் சினிமாவில் செய்யாத சாதனைகளே கிடையாது. பஸ் கண்டக்டராக இருந்து தமிழ் திரையுலகையே ஆளும் அளவுக்கு அவர் வளர்ந்திருக்கிறார் என்றால், அவர் நடிப்பும், அவரது ஸ்டெயிலும்தான் காரணம்.

பழைய கால இயக்குநர்கள் முதல் தற்போதைய இளம் இயக்குநர்கள் வரை அனைத்து தரப்பினரின் கதைகளிலும் நடித்து வருகிறார். கடைசியாக, அவர் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த ஜெயிலர் திரைப்படம்.

ரஜினிகாந்த் நடிக்க வருவதற்கு முன்னர் பெங்களூரில் பஸ் கண்டக்டர் ஆக வேலை பார்த்தவர். இந்நிலையில் ஜெயிலர் படத்தை முடித்த கையேடு இமயமலை, ஜார்கண்ட், அயோத்தி ராமர் கோவில் என தொடர்ச்சியாக சுற்றுப்பார்த்து வரும் ரஜினி இன்று பெங்களூருக்கு சென்று தான் பஸ் கண்டக்டர் ஆக வேலை பார்த்த டிப்போவை சுற்றிப்பார்த்து அங்குள்ள ஊழியர்களுடன் பழைய நினைவுகளை பகிர்ந்து கலந்துரையாடிவிட்டு அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi movie ticket booking ‘கோட்’ சாதனையை துவம்சம் செய்த அஜித்…டாப் கியரில் விடாமுயற்சி..!