இவரா இப்படி? ராஜ்கிரண் காலில் விழுந்து கதறும் கார்த்தி – ஷூட்டிங் ஸ்பாட்டில் அக்கப்போர்!
Author: Shree29 August 2023, 4:11 pm
கிராம பாங்கான கதாபாத்திரங்களுக்கு பக்காவாக பொருந்துபவர் நடிகர் ராஜ் கிரண் இவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் பிறந்து தமிழ் சினிமாவின் நடிகர் , இயக்குனர் , தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி வருகிறார். மிகவும் எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த இவர் குறிப்பாக கிராமத்து ரசிகர்களை குறிவைத்து நடித்து அவர்களின் தீவிர ரசிகர் ஆனார்.
தமிழில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சில திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார். தான் மட்டும் வளர்ந்தால் போதும் என்ற எண்ணம் கொண்ட நடிகர்களுக்கு மாறான ராஜ்கிரண் நிறைய புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்துள்ளாார். தமிழ் சினிமாவின் தற்போது உச்ச காமெடி நடிகரான வடிவேலுவை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்து அவருக்கு வாழ்க்கை கொடுத்தவர் ராஜ்கிரண்.
கிட்டதட்ட 70 வயதை நெருங்கும் ராஜ்கிரண் இன்னும் படங்களில் நடித்து வருகிறார். தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி திரைப்படத்தில் வயதான முதியவர் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில் ராஜ்கிரண் ஜப்பான் என்ற படத்தில் நடிகர் கார்த்தியின் தாத்தாவாக நடித்து வருகிறார்.
இதில் அவரது கேரக்டர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர். அதற்காக எம்ஜிஆர் போன்றே நடை, உடை, பாவனை எல்லாம் செய்து அவரை போலவே நடித்து வருகிறாராம். மஞ்ச கலர் சட்டை, சிவப்பு கலர் பேண்ட், பிரவுன் கலர் ஷூ, வெள்ளை கலர் தொப்பி அணிந்து கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டிலே சுற்றித்திரிந்து ஒரு வழி பண்ணிடுறாராம். இதை பார்த்து கார்த்தி விழுந்து விழுந்து சிரிக்கிறாராம். ஒரு கட்டத்திற்கு மேல் சிரிப்பை அடக்க முடியாமல் யப்பா சாமி போதும் முடியலைப்பா என கூறினாராம். அவரின் நடிப்பு பார்த்து இவருக்குள் இப்படி ஒரு எம்ஜிஆரா? என எல்லோரும் பார்த்து வியந்துவிட்டார்களாம்.