சமையல் சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு… இல்லத்தரசிகளுக்கு மத்திய அரசு கொடுத்த குட் நியூஸ்!!!
Author: Udayachandran RadhaKrishnan29 August 2023, 4:28 pm
சமையல் சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு… இல்லத்தரசிகளுக்கு மத்திய அரசு கொடுத்த குட் நியூஸ்!!!
உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரை கூட்டத்தில் சிலிண்டருக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக மானியம் வழங்கப்படுவதன் மூலம் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படும் என்பது குறிப்பிடப்படுகிறது.
பிரதமரின் உஜ்வாலா திட்டம் பிரதமர் மோடியால் 2016 மே 1 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் 5 கோடி கேஸ் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் 14.2 கிலோவின் விலை ரூ. 1.103 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடைசியாக மார்ச் 1 ஆம் தேதி ரூ. 50 விலையேற்றம் செய்யப்பட்டது.