காவடி ஆட்டம் ஆடிய அண்ணாமலை : கோவையில் களைகட்டிய நொய்யல் திருவிழா.. வைரல் வீடியோ!
Author: Udayachandran RadhaKrishnan29 August 2023, 7:17 pm
காவடி ஆட்டம் ஆடிய அண்ணாமலை : கோவையில் களைகட்டிய நொய்யல் திருவிழா.. வைரல் வீடியோ!
கோவை பேரூர் ஆதீன மடத்தில்,பாரதீய சன்யாசிகள் சங்கம் சார்பில் நொய்யல் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் தலைமையில் நடைபெற்று வருகிறது.
நொய்யல் ஆற்றை காப்பதை மையமாக கொண்டு நடைபெறும் இந்நிகழ்விற்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இந்நிகழ்விற்கு வருகை தந்த அவர், அங்கு நடைபெறும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு கழித்தார். முன்னதாக அவர் காவடி ஆட்ட கலைகுழுவினருடன் இணைந்து காவடி ஆட்டம் ஆடினார்.