தியேட்டரில் இருந்து வெளிய ஓடிட்டேனா? யார் யாரு கூட போனா எனக்கு என்ன? நாக சைதன்யா காட்டம்!

Author: Shree
29 August 2023, 7:28 pm

நடிகை சமந்தா தெலுங்கில் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள குஷி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் தேவர்கொண்டா ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.

இப்படம் வருகிற செப்டம்பர் 1ம் தேதி வெளியாகிறது. இதற்காக சமந்தா – விஜய் தேவர்கொண்டா இருவரும் நெருக்கமாக ரொமான்ஸ் செய்து ப்ரோமோஷனில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாக காதல் கிசு கிசு செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.

இதனிடையே நடிகர் நாக சைதன்யா “பாய்ஸ் ஹாஸ்டல்” என்னும் படத்தை திரையரங்கில் பார்க்க சென்றுள்ளார். அப்போது, இடைவேளை நேரத்தில் சமந்தாவின் குஷி படத்தின் டிரைலர் திரையில் ஒளிபரப்பப்பட்டு உள்ளது. அதில் சமந்தா விஜய் தேவரகொண்டாவின் நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகளை பார்த்து அப்செட் ஆகி தியேட்டரில் இருந்து எழுந்து வெளியில் ஓடிவிட்டதாக தெலுங்கு திரை வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதற்கு முடிவு கட்டியுள்ள நடிகர் நாக சைதன்யா…. அப்படி எதுவுமே நடக்கவில்லை இது முற்றிலும் தவறான செய்தி. தயவு செய்து இந்த செய்தியை மாற்றி அமையுங்கள் என சம்மந்தப்பட்ட தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து அது வெறும் வதந்தி என்பது தற்போது தெரியவந்துள்ளது.

  • vijay famous dialogue what bro spoke by ajith in good bad ugly movie “வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?