சபரிமலைக்கு சென்ற பக்தரின் இருமுடி பையில் பாம்பு : ஷாக் ஆன தமிழக பக்தர்.. பதற வைத்த காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
29 August 2023, 9:32 pm

சபரிமலைக்கு சென்ற பக்தரின் இருமுடி பையில் பாம்பு : ஷாக் ஆன தமிழக பக்தர்.. பதற வைத்த காட்சி!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது ஓணம் பண்டிகைக்காக கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் தற்போது சபரிமலையில் குவிந்துள்ள நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் மலையேறி வந்ததன் காரணமாக உடல் அசதியால் 18 படி அருகே உள்ள மரத்தின் அருகே ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் வைத்திருந்த இருமுடி அசைவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் 18 படி அருகே தனது இரு முடியை கீழே வைத்தார்.

அப்போது இருமுடியில் உள்ளே பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் அங்கிருந்த சிறப்பு காவல் படையினர் விரைந்து வந்து இரு முடியை பார்த்தபோது அதில் பாம்பு ஒன்று இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து அந்தப் பகுதியில் இருந்து தப்பி ஓட முயன்ற பாம்பை தனது கையால் பிடித்து அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து பின்னர் அதனை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டார்.

https://vimeo.com/859053697?share=copy

பக்தர்கள் அதிகம் கூடும் சபரிமலை ஐயப்பன் கோவில் பதினெட்டாம்படி அருகே பாம்பு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!