வெல்டிங் அடிக்கும் போது டேங்கர் லாரி வெடித்து விபத்து.. உடல் சிதறி உயிரிழந்த வடமாநில வாலிபர் : கோவையில் பயங்கரம்!

Author: Udayachandran RadhaKrishnan
30 August 2023, 11:41 am

வெல்டிங் அடிக்கும் போது டேங்கர் லாரி வெடித்த விபத்த.. உடல் சிதறி உயிரிழந்த வடமாநில வாலிபர் : கோவையில் பயங்கரம்!

கோவை மலுமிச்சம்பட்டி அருகே சண்முகம் என்பவருக்கு சொந்தமான லாரி வெல்டிங் சர்வீஸ் செய்யும் ஒர்க்சாப்பில் இன்று காலை வெல்டிங் அடிக்கும்போது டேங்கர் லாரி வெடித்து விபத்து.

லாரி டேங்கர் வெடித்ததில் வெல்டிங் பணியில் ஈடுபட்ட உத்திர பிரதேசத்தை சார்ந்த வக்கீல் (38) உயிரிழப்பு. படுகாயமடைந்த ரவி (20) என்பவர் சிகிச்சைக்காக மதுக்கரை மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளனர்.

வெல்டிங் பணி நடந்து வந்த லாரி டேங்கரில் எப்பொழுதும் வேதிப்பொருட்கள் கொண்டு செல்வது வழக்கம். லாரியில் உள்ள டேங்கரில் வெல்டிங் விட்டு போயிருந்தால் அதை சரி செய்ய நேற்று இரவு சுமார் 1 மணிக்கு ஒர்க்ஷாப்பிர்க்கு லாரி வந்துள்ளது.

இன்று காலை வெல்டிங் செய்ய ஒர்க்சாப்பில் வேலை செய்யும் வடமாநிலத்தை சேர்ந்த 5 பேர் துவங்கியுள்ளனர். வக்கீல் என்பவர் லாரியின் உள்ளே சென்று வெல்டிங் செய்யவும், வெளியே ரவி என்பவர் உதவிக்கு இருக்க தீடிரென லாரியின் டங்கரில் ஒட்டியுள்ள கெமிக்கல் தீ பற்றி வெடித்தது.

இதில் வக்கீல் என்பவர் தூக்கி வீசப்பட்டு இறந்தார். அருகில் உதவிக்கு இருந்த ரவி பலத்தகாயத்துடன் மதுக்கரை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தகவல் அறிந்த கிணத்துக்கடவு தீ அணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வெல்டிங் தீயை அணைத்தனர். மதுக்கரை போலிஸார் சம்பவ இடத்தில் விசாரணையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!