விவசாயிகளை வஞ்சித்த CM ஸ்டாலின்… 15 சம்பா சாகுபடி துவங்க முடியாத நிலை… கண்ணீர் விடும் விவசாயிகள் ; பி.ஆர். பாண்டியன்..!!

Author: Babu Lakshmanan
30 August 2023, 5:46 pm

முதல்வரின் காவிரி டெல்டா வருகை விவசாயிகளை வஞ்சித்து விட்டது என மன்னார்குடியில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி .ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:- தமிழ்நாட்டில் காவிரி டெல்டாவில் 5 லட்சம் ஏக்கரில் முதலமைச்சர் வேண்டுகோளை ஏற்று குறுவை சாகுபடி மேற்கொண்டனர். சுமார் 3.50லட்சம் ஏக்கர் காவிநீர் பற்றாக்குறையால் கருகத் தொடங்கிவிட்டது. நிலத்தடி நீரை நம்பி 1.50 லட்சம் ஏக்கரில் சாகுபடிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி துவங்க முடியாத முட்டுக்கட்டை ஏற்பட்டு விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறுகிறார்கள். நான்கு தினங்கள் காவிரி டெல்டாவில் முகாமிட்ட முதலமைச்சர் விவசாயிகளை சந்திக்கவில்லை. பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்த்து ஆறுதல் சொல்லவில்லை. இவரது நடவடிக்கை காவி டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் அமைந்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடந்த வழக்கின் அடிப்படையில் காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழு கூடி 5 ஆயிரம் கன அடி வீதம் 15 தினங்களுக்கு விடுவிக்க பரிந்துரை செய்தது. காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாடு அரசு 15 தினங்களுக்கு 7500 கண அடி தண்ணீர் விடுவிக்க கோரியது, எதனையும் கர்நாடகம் ஏற்க மறுத்து 3000ம் கனஅடி என பிடிவாதம் பிடிக்கிற நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் வினாடிக்கு 5000 கனஅடி தண்ணீர் விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. உத்தரவை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் ஆணையத்திற்கு இருக்கிறது.

கர்நாடகா ஏற்க மறுத்தால் ஆணையம் மத்திய அரசிடம் முறையிட்டு மத்திய அரசின் உதவியை கோர வேண்டும். மத்திய அரசு உதவியுடன் தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கையை ஆணையம் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மத்திய அரசு உதவ முன்வராவிட்டால், உச்சநீதிமன்றத்தில் ஆணையம் அவசரமாக முறையிட்டு கருகும் பயிரை காப்பாற்ற தண்ணீரை பெற்று தர வேண்டும்.

அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். சட்டத்தின் அடிப்படையிலேயே தண்ணீரை பெற்று தருவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன், என்றார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?