சிலிண்டர் விலை குறைப்பு தேர்தலுக்கான அறிகுறி… பாஜகவுக்கு அடுத்து அதுதான் டார்கெட் ; முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்

Author: Babu Lakshmanan
30 August 2023, 8:19 pm

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைத்திருப்பது தேர்தலுக்கான அறிகுறி என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னையில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் கால்வாய் அகலப்படுத்தும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். தனது சொந்த தொகுதியான கொளத்தூர், திருவிக நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும்அவர் ஆய்வு நடத்தினார். விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- சென்னை கொளத்தூரில் மழைநீர் வடிகால் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்து விட்டன. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு தேர்தல் நெருங்குவதற்கான அறிகுறி. பெட்ரோல், டீசல் விலையை குறைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. I.N.D.I.A.கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளது, எனக் கூறினார்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!