தனிமையில் ஒதுங்க நினைத்த காதலன்… திடீரென என்ட்ரி கொடுத்து தாக்கிய Boy Bestie-க்கள்.. இறுதியில் காதலிக்கு நேர்ந்த கதி..!!

Author: Babu Lakshmanan
30 August 2023, 9:59 pm

சென்னை அருகே வேங்கைவாசல் சித்தேரிக்கு வரும் ஜோடிகளை இளைஞர்கள் தாக்கும் பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

சென்னை மேடவாக்கம் அடுத்த வேங்கைவாசல் சித்தேரி பகுதியில் ஏரியை ஒட்டி நடைபாதை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அருகில் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் ஜோடி, ஜோடியாக வந்து பொழுதை கழிப்பதை வாடிக்கையாகி வைத்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் காதலர்கள் சித்தேரி பகுதிக்கு வந்தனர். அப்போது, அவர்களை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அந்தப் பெண்ணின் பெஸ்டிகள் 3 பேர், அப்பெண்ணின் ஆண் நண்பரை சரமாரியாக தாக்கினர். அப்பெண் அவர்களிடம் கெஞ்சியும் அவர்கள் அடிப்பதை நிறுத்தவில்லை.

பின்னர், அடித்துவிட்டு அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தன்னை தாக்கியது தனது காதலியின் நண்பர்கள் என அறிந்த அந்த நபர், காதலியின் செல்போனை எடுத்து சோதனை செய்துள்ளார். அதில், தாங்கள் இருக்கும் இடத்தை, நண்பர்களுக்கு காதலி தெரிவித்த மெசேஜை பார்த்து கடுப்பாகி போனார். அதன் பிறகு அந்த பெண்ணை காதலன் கடுமையாக தாக்கினார். தலை முடியை பிடித்து இழுத்து அடித்தார்.

அதே போல் மற்றொரு ஜோடி ஒன்று வந்தது. அப்பெண்ணுடன் வந்த ஆண் நபர் அப்பெண்ணை தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் நடைபாதை பாலத்தின் மீதிருந்து தூக்கி தள்ளி விட முயன்றார். இதனை கண்ட பகுதிவாசிகள் சத்தம் போடவே அங்கிருந்து சென்றனர்.

இந்த இடத்தில் சிலர் ஒன்று கூடி மது அருந்துவது, தாக்குவது என தொடர் சம்பவங்கள் நடைபெறுவதாகவும், அதனை காவல்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
  • Close menu