அடம் பிடித்த மகனை கன்வின்ஸ் செய்ய கனடாவுக்கு சென்ற விஜய்.. ஓ கதை அப்படி போகுதா..!

Author: Vignesh
31 August 2023, 11:38 am

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளது அனைவரும் அறிந்தது. அதில் இவரது மகள் தெறி படத்தில் ஒரு சீனில் நடித்திருப்பார். மேலும், மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இவர் கடந்த ஆண்டு சினிமாதுறை சார்ந்த படிப்பை முடித்தார்.

இவர் ஏற்கனவே, தனது தந்தை விஜய்யுடன் இணைந்து வேட்டைக்காரன் படத்தில் கூட நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சஞ்சய் தற்போது இயக்குனராக களமிறங்கியுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்கும் ஒப்பந்தத்தில் சஞ்சய் கையெழுத்திட்ட போட்டோக்களை லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான லைகா விக்னேஷ் சிவன் போன்ற அனுபவம் உள்ள இயக்குநர்களையே கதை சரி இல்லை என நீக்கியது. அப்படி இருக்கும்போது மிகப்பெரிய நடிகர் விஜய் அவரின் மகன் சஞ்சய் என்ற ஒரே காரணத்துக்காக அவரை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை எதை நம்பி ஒப்படைகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்போ இனி திரைத்துறையில் திறமைக்கு மரியாதையை இல்லையா? என எல்லோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, நீ படம் தானே இயக்கனும் கதை தயார் பண்ணிட்டு சொல்லு நானே அந்த பட்டதில் ஹீரோவாக நடிக்கிறேன் என விஜய் கூறினாராம். இதனால் கடுப்பான சஞ்சய்… என்னுடைய கதைக்கு யார் பொருத்தமாக இருப்பார்கள். யாரை தேர்வு செய்யலாம் என எல்லாவற்றையும் நானே பார்த்துக்கொள்கிறேன் என கூறினாராம். கோபத்தில் இருந்த மகனை கன்வின்ஸ் செய்ய விஜய் கனடா பறந்துள்ளார்.

Vijay - Updatenews360

விஜய் தனது மகன் சஞ்சய்வுடன் கனடாவில் ரெஸ்டாரண்டில் சாப்பிட்டு பேசிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மகள் திவ்யா ஷாஷா மற்றும் மனைவி சங்கீதா இல்லாமல் விஜயின் மகனை சந்தித்துள்ளார். சஞ்சய் கூடிய சீக்கிரம் இயக்குனராக லைக்கா தயாரிக்கும் படத்தை இயக்க உள்ளார். அது குறித்து கலந்து ஆலோசிக்க விஜய் அமெரிக்காவிற்கு அவுட்டிங் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது என்று கூறப்படுகிறது.

Vijay - Updatenews360
  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!