ஜோதிகாவின் மகளா இது… மூக்கும் முழியும் அப்படியே அம்மாவை போலவே இருக்காங்கப்பா!

Author: Shree
31 August 2023, 2:21 pm

மும்பையை சேர்ந்தவரான நடிகை ஜோதிகா, முதலில் இந்தி படத்தில் நடித்தார். பின்னர் 1999-ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி திரைப்படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக சில காட்சிகளில் மட்டும் நடித்திருப்பார். ஜோதிகாவுக்கு அடுத்ததாக சூர்யாவுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தது.

இருவரும் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் ஜோடியாக நடித்தனர். இப்படம் மூலம் தான் சூர்யா – ஜோதிகா இடையே நட்பு ஏற்பட்டு, பின்னர் அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், பேரழகன், மாயாவி போன்ற படங்களிலும் இருவரும் ஜோடியாக நடித்தனர். சுமார் 6 ஆண்டுகள் உருகி உருகி காதலித்த இந்த ஜோடி கடந்த 2006-ம் ஆண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டது.

திருமணத்துக்கு பின் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார் ஜோதிகா. இவருக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர். குழந்தைகள் இருவரும் வளர்ந்த பின்னரே சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கினார் ஜோதிகா. தற்போது மும்பைக்கு சென்று செட்டில் ஆகி அங்கு இந்தி திரைப்படங்களில் நடிக்க அரவம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே சூர்யாவின் மகள் தியா மாடர்ன் உடைகளை அணிந்து மீடியாவின் கண்களில் தென்பட்டு வருகிறார். இதனால் தியாவை ஹீரோயின் ஆக்க திட்டமிடுகிறார்களோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளனர் இந்நிலையில் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக அதில் தியா மூக்கும் முழியும் அப்படியே ஜோதிகாவையே போலவே இருக்கிறார் என நெட்டிசன்ஸ் கருத்து கூறி வருகிறார்கள்.

  • cs-amudhan-shared-that-does-ilaiyaraaja-want-money-in-this-issue இளையராஜாவுக்கு காசுதான் முக்கியமா? இப்படிப்பட்ட ஒரு மனுஷன்… பிரபல இயக்குனர் காட்டம்…
  • Close menu