படுத்தா 40 ஆயிரம்.. நடிச்சா 10 ஆயிரம்.. கார்த்தியின் ரீல் அக்காவுக்கு கொடுத்த அட்ஜஸ்ட்மென்ட் டீல்..!
Author: Vignesh31 August 2023, 2:28 pm
நடிகை ஜீவிதா விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் மூலம் பிரபலமானவர். பின்னர் நடிகை ஜீவிதா 2018 -ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான “கடைக்குட்டி சிங்கம்” என்ற படத்திலும் நடித்து இருந்தார். தற்போது சன் டிவியில் வரும் அருவி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இதனிடையே, பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஜீவிதா, திரைத்துறையில் நடந்த பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதில், “தான் சினிமாவிற்கு வரும் முன்பு படங்களில் ஹீரோயினாக நடிக்க ஆசைப்பட்ட சமயத்தில், ஒருவர் பட வாய்ப்பு தருவதாக தன்னிடம் கூறி அந்த படத்தில் நீங்க தான் இரண்டாம் கதாநாயகி என்று ஆசையை வளர்த்து விட்டாராம்”.
பின்னர், “சில மணி நேரம் கழித்து நீங்கள் அட்ஜஸ்மென்ட் பண்ண முடியுமா? நாங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்களுடைய ரூமுக்கு வருவோம் என்று ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார். அட்ஜஸ்மென்ட் 15 நாட்கள் நடக்கும் என்று இவர்கள் கூறியதை கேட்டவுடன் தான் அங்கு இருந்து உடனடியாக வந்துவிட்டதாக நடிகை ஜீவிதா உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும் போது ஒரு நாளைக்கு 40,000 என சம்பளம் பேசி விட்டு, அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார்கள். தயவு செய்து என்னால் அதெல்லாம் முடியாது என்று சொன்னவுடன் ஒரு நாளைக்கு நடிப்பதற்கு மட்டும் சம்பளம் 10,000 என்று கூறினார்கள். அது தனக்கு போதும் என அந்த படத்தில் நடித்ததாக ஜீவிதா தெரிவித்து இருக்கிறார். இந்த விஷயத்தை சமீபத்தில் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் யூடியூப் ஒன்றில் கூறியிருந்தார்.