‘இஷ்டமிருந்தால் குடிங்க.. இல்லைனா கிளம்புங்க’.. நள்ளிரவில் சட்டவிரோத மதுவிற்பனை.. விற்பனையாளரின் அலட்சிய பதில்…!!

Author: Babu Lakshmanan
31 August 2023, 2:19 pm

இஷ்டமிருந்தால் குடிங்க.. இல்லைனா கிளம்புங்க என்று திருப்பூரில் பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் – கேவிஆர் நகரில், செயல்படும் டாஸ்மாக் கடை எண் 1927 மதுக்கூடத்தில் 24 மணி நேரமும் மது விற்கப்படுவதாகவும், இங்கு கலப்படம் மதுவும் விற்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றனர்.

இப்படியிருக்கையில், நேற்று நள்ளிரவில் மதுப்பிரியர் ஒருவர், சட்டவிரோதமாக பாரில் விற்கப்படும் மதுவை வாங்கியுள்ளார். அப்போது, சீல் உடைக்கப்பட்ட நிலையில் பாட்டில் இருந்ததாகவும், இதுகுறித்து கேட்டால் டாஸ்மாக் கடை விற்பனையாளர் தருவதைத்தான் நான் விற்பனை செய்வதாகவும், இஷ்டமிருந்தால் குடிங்க, இல்லன்னா காச வாங்கிட்டு போங்க என்று மது விற்பனை செய்பவர் அலட்சியமாக பதில் கூறியுள்ளார்.

https://player.vimeo.com/video/859682174?badge=0&autopause=0&player_id=0&app_id=58479

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுபோன்ற சட்ட விரோத மது விற்பனையை தடை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!