மேலாடை இல்லாமல் நடித்தபோது…. இயக்குனர் கூச்சமே இல்லாமல் கேட்டார் – மனம் திறந்த பிரபல நடிகை!
Author: Shree31 August 2023, 5:40 pm
பிரபல சீரியல் நடிகையான நீலிமா ராணி தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமாகி அதன் பின்னர் சீரியல், திரைப்படம் என பிசியாக நடித்து வருகிறார். இவர்1992ம் ஆண்டு நடிகர் கமல் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அதற்கு பிறகு பல திரைப்படங்களில் முகமறியப்பட்ட ரோல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகையானார். இதுவரை 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் 50க்கும் மேற்பட்ட சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இவர் கரத்தில் நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த துணை நடிகைக்கான விருது வென்றார்.
அதன் பின்னர் நிறைய திரைப்பட வாய்ப்புகள் அவரை தேடி வர ” அமளி துமளி, இருவர் உள்ளம், பண்ணையாரும் பத்மினியும்” போன்ற திரைப்படங்களில் நடித்தார். இதனிடையே தன்னை விட மூத்த வயதினரான இசைவாணன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளது. நீலிமா ராணி சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கணவரை ரசிகர்கள் கிண்டல் செய்வது குறித்து கூறி மனம் வருந்தினார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நீலிமாவிடம் மேலாடையில்லாமல் நடிப்பது குறித்து உங்களது கருத்து என்ன என கேட்டதற்கு… நடிகைகளுக்கு மேலாடையில்லாமல் நடிப்பதெல்லாம் ஒரு பெரிய விஷயமே கிடையாது. எத்தனையோ நடிகைகள் அதுபோன்ற காட்சிகளில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். எனக்கு அப்படி நடித்தது ஒரு விஷயமாகவே தெரியவில்லை. ஒரு படத்திற்கு இயக்குனர் என்ன கேட்கிறாரோ அதை அப்படியே நாங்கள் செய்யவேண்டும். அப்படித்தான் என்னிடமும் இயக்குனர் மேலாடை இன்றி கவர்ச்சியாக நடிக்க கேட்டார். அது தான் சினிமா… சினிமா தான் எங்கள் தொழில் என நீலிமா கூறினார்.