‘கலெக்டரிடம் வேணும்னா சொல்லுங்க’… கொட்டும் மழையிலும் தார் சாலை போட்ட ஊழியர்கள் ; அதிர்ச்சி வீடியோ!

Author: Babu Lakshmanan
1 September 2023, 12:26 pm

திண்டுக்கல்லில் மழையோடு மழையாக தார் சாலை அமைப்பதை வீடியோ எடுப்பதைக் கண்டு அங்கிருந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்திலிருந்து பேருந்து நிலையம் செல்லக்கூடிய இணைப்பு சாலை பகுதியில் சாலை அமைக்கும் பணி ஆனது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தற்பொழுது மழை பெய்து கொண்டிருப்பதால் தார் சாலை எப்படி தரமாக இருக்கும் என வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது, அங்கிருந்த நபர், ‘ஒருவர் உங்களை யார் வீடியோ எடுக்கச் சொன்னது, கலெக்டர் சொன்னாரா..? கலெக்டர்ட வேணா சொல்லுங்க,’ என ஒருமையில் பேசினார்.

https://player.vimeo.com/video/860044611?badge=0&autopause=0&player_id=0&app_id=58479

அதோடு, ‘இங்க கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க.. உங்களுக்கெல்லாம் வேற வேலை இல்லையா..? எப்ப பார்த்தாலும் எத்தனை தடவைதான் ஃபோட்டோ எடுப்பீங்க,’ என கரராக பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  • harris jayaraj talks about Artificial intelligence spreading viral on internet செத்துப்போனவங்களை ஏன் பாட வைக்கனும்?-ஆதங்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ்!