விஜய்க்கு ஜோடியா…? தெறித்து ஓடிய ஜோதிகா – வேறு நடிகையை ரவுண்ட் செய்த தளபதி 68 படக்குழு!

Author: Shree
1 September 2023, 5:45 pm

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் . ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

இப்படத்தில் விஜய் அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜோதிகாவையும் மகன் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகனையும் படக்குழு புக் செய்தது, ஆனால், ஜோதிகா என்னால் விஜய்யுடன் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம்.

இதனை அடுத்து சிம்ரனை படக்குழு கேட்டுள்ளது ஆனால், அவரும் நோ சொல்லிவிட்டாராம். அதன் பிறகு நடிகை சினேகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஓகே செய்துள்ளதாம் படக்குழு. ஜோதிகா ஏற்கனவே மெர்சல் படத்தில் நித்யா மேனன் கேரக்டரை நிராகரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி