நிலவில் சதமடித்த பிரக்யான்… சந்திரனை சல்லடை போடும் ரோவர் : இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!!!

Author: Udayachandran RadhaKrishnan
2 September 2023, 2:43 pm

நிலவில் சதமடித்த பிரக்யான்… சந்திரனை சல்லடை போடும் ரோவர் : இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!!!

கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்தது.

லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து வெளிவந்த ரோவர் வாகனம் நிலவில் தரையிறங்கி நிலவில் ஒரு நிலவு நாள் (14 நாட்கள்) ஆயுள்காலத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

இந்நிலையில், ரோவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு அப்டேட்களையும் இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் ஆனது நிலவின் மேற்பரப்பில் 100 மீட்டருக்கு மேல் பயணம் செய்துள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இஸ்ரோ நிலவின் தென் துருவத்தில் சல்பர், ஆக்சிஜன் உள்ளது என ரோவரில் உள்ள LIBS ஆய்வு கருவி கண்டறிந்துள்ளது என தெரிவித்துள்ளது.

நிலவின் மேற்பரப்பில் ஆக்சிஜன் கண்டறியப்பட்ட நிலையில், ஹைட்ரஜனை தேடும் பணியில் ரோவர் உள்ளது. இரும்பு, குரோமியம், டைட்டானியம், அக்னிசியம் சிலிக்கான் உள்ளிட்ட கனிமங்கள் உள்ளதையும் கண்டறிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

  • Arun and Archana in Bigg Boss Houseரொமாண்டிக் ஆக மாறிய பிக் பாஸ் வீடு.. அருணை கட்டிப்பிடித்து அழுத அர்ச்சனா!
  • Views: - 488

    0

    0