அதிமுகவில் நடந்த திடீர் மாற்றம் : தேதியுடன் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
2 September 2023, 9:22 pm

அதிமுகவில் நடந்த திடீர் மாற்றம் : தேதியுடன் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.ஜி.ஆர்.மாளிகையில் வருகிற 4-ந்தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறுவதாக இருந்த ஆலோசனை கூட்டம் தேதி மாற்றப்பட்டு 10-09-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டுக் குழுவினர்கள் ஆகிய அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!