அஜித்தை மட்டும் மிஸ் பண்ணிட்டேன், அதுவும் விரைவில் நடக்கும்: ஷாருக்கான்..!

Author: Vignesh
4 September 2023, 10:21 am

பாலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை வைத்து ஜாவான் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில், தனது சென்னை பயணம் குறித்த கேள்விக்கு ஷாருக்கான் ரசிகருக்கு பதில் அளித்துள்ளார். சென்னையில், சமீபத்தில் செய்த பயணத்தில் நான் ரஜினிகாந்த்தை சந்தித்தேன். தளபதி விஜயும் சந்தித்தேன். ஆனால், அஜித்தை மட்டும் என்னால் சந்திக்க முடியவில்லை. ஆனால், அதுவும் கூடிய சீக்கிரம் நடக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

முன்னதாக, அஜித்துடன் ஷாருக்கான் அசோகா என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அஜித் சாருக்கான் மீண்டும் இணைந்து நடிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!