கணவனை வெறுப்பேற்றும் சமந்தா.. அப்செட்டான நாகசைதன்யா.. ரசிகர்கள் பதிலடி..!

Author: Vignesh
4 September 2023, 12:00 pm

நடிகை சமந்தா தெலுங்கில் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள குஷி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் தேவர்கொண்டா ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படம் ரிலீஸ் ஆனது.

இதில் சமந்தா – விஜய் தேவர்கொண்டா இருவரும் ரியல் கணவன் மனைவியாக வாழ்ந்துள்ளார்கள். சமந்தா பேகம் என்ற முஸ்லீம் பெண்ணாக பொய்யாக நடிக்கிறார். அதனை ஹீரோ விஜய் தேவர்கொண்டா கண்டுபிடித்து சமந்தா பேகம் இல்லை பிராமின் பெண் என தெரிந்துக்கொள்கிறார். அதன் பின்னர் இரு வீட்டாரும் பேசி திருமணத்தை நடத்த திட்டமிடுகிறார்கள்.

ஆனால், சமந்தாவின் தந்தை இருவரின் ஜாதகம் சரியில்லை என்று திருமணத்திற்கு பிரச்சனை ஏற்படுத்துகிறார். இதனால் கிட்டத்தட்ட திருமணம் நின்றுபோகிறது. ஆனால், சமந்தா – விஜய் தேவர்கொண்டா இருவருக்கும் இடையே உள்ள காதலால் பிரிய மனமில்லாமல் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டு தனிக்குடித்தனம் செல்கிறார்கள்.

kushi-vijaydevarakonda-samantha

பின்னர் கணவன் மனைவியாக இருவரும் மிகவும் நெருக்கமாக படுக்கையறை காட்சிகள், லிப்லாக் சீன் உள்ளிட்டவற்றில் ரியல் கணவன் – மனைவியாகவே நடித்துள்ளனர். இதனிடையே அவ்வப்போது சின்ன சின்னப்பிரச்சனை ஏற்படுகிறது. அதையும் தாண்டி காதல் அவர்களை ஒருங்கிணைக்கிறது. இது அனைத்தும் எல்லோரது லைஃபிலும் கனெக்ட் ஆகும் வகையில் தத்ரூபமாக படமெடுத்திருக்கிறார் இயக்குனர். மொத்தத்தில் குஷி ரசிகர்களை செம குஷியாக்கிவிட்டது.

naga chaitanya samantha-updatenews360

இதனிடையே, குஷி படத்தில் சமந்தா விஜய் தேவரகொண்டார்களுடன் லிப் லாக் மற்றும் நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நாகசைதன்யாவை வெறுப்பேற்றதான் சமந்தா இப்படி செய்கிறார் என சொல்ல ஏன் நாகசைதன்யா கூட இதுபோன்ற காட்சிகளில் நடித்திருக்கிறார் அப்போது தெரியவில்லையா என சமந்தா ரசிகர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

  • Famous director dies suddenly… Film industry in shock பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!