கழிவுநீர் கலந்த குடிநீர்.. பலியான பெண் : ஆறுதல் கூற சென்ற அமைச்சர் பொன்முடியை சுற்றி வளைத்த மக்கள் : சரமாரிக் கேள்வி!!!

Author: Udayachandran RadhaKrishnan
4 September 2023, 4:11 pm

கழிவுநீர் கலந்த குடிநீர்.. பலியான பெண் : ஆறுதல் கூற சென்ற அமைச்சர் பொன்முடியை சுற்றி வளைத்த மக்கள் : சரமாரிக் கேள்வி!!!

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அடுத்த நவமால்மருதூர் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்குள்ள குடிநீர் குழாயில், கழிவுநீர் கலந்ததால் அதைக் குடித்த அப்பகுதி மக்கள் பலருக்கும் வாந்தி, பேதி மற்றும் உடல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட தமிழேந்தி, சியாமளா, சுப்பையா, ஜமுனா, பிரபு உட்பட 20க்கும் மேற்பட்டோர் ஜிப்மர், முண்டியம்பாக்கம், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் கடலூர் மாவட்டம், செல்வன்குப்பம் பகுதியைச் சேர்ந்த சுப்பையா மனைவி சியாமளா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

இதனையடுத்து முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் பொன்முடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சரை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாகவே குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதாக புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை குற்றம் சாட்டினர்.

மேலும் அமைச்சர் பொன்முடியை சுற்ற வளைத்தபொதுமக்கள், போதுமான மருத்துவ வசதிகள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தரமாக இல்லை எனவும், எம்எல்ஏ புகழேந்தியும் ஆய்வு மேற்கொண்டிருந்தால் இந்த தவறு நடந்திருக்காது எனவும், மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறியும் நடவடிக்கை இல்லை என சரமாரியாக புகார் தெரிவித்தனர்.

கழிவு நீர் கலந்த குடிநீர் குடித்ததால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் கண்டமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ஆர்த்தி தலைமையிலான மருத்துவக் குழுவினர் அப்பகுதியில் குடிநீரை ஆய்வு செய்தனர். மேலும், குடிநீரில் கழிவுநீர் கலந்து பாதிக்கப்பட்ட பகுதியில் குடிநீர் வினியோகம் தடைசெய்யப்பட்டு, டேங்கர் லாரி மூலம் அப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!