கலாநிதி மாறனின் Gift செட்டில்மென்ட் இதோடு நின்றிடுமா? அனிருத்துக்கு மூன்று கார் + பொட்டி நிறைய பணம்!

Author: Shree
5 September 2023, 11:21 am

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், சுனில், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார், அண்ணாத்த படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தனர். இதனால், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

உலகம் முழுவதும் வெளியான ஜெயிலர் படத்திற்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அனைத்து திரையரங்குகளும் ஃபுல் ஆன நிலையில், ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். படம் இதுவரை சுமார் 525 கோடிக்கும் அதிகமான வசூல் ஈட்டி சாதனை படைத்ததாக கூறப்படுகிறது. 240 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் டபுள் மடங்கு வசூல் ஈட்டியால் படத்தின் தயாரிப்பாளர் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே போய்விட்டார்.

இதனால் படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர்களுக்கு சிறப்பான பரிசு சலுகைகள் வழங்கி வரும் கலாநிதி மாறன் முதலில் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக கொடுத்தார். கூடவே சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் உங்களது அடுத்த படத்தையும் வெளியிடலாம். அதற்காக நீங்கள் ஜெயிலர் படத்தில் வாங்கிய சம்பளத்தை விட டபுள் மடங்கு சம்பளம் கொடுக்கிறோம் என உறுதி அளித்தார்.

அதன் பின்னர் ரஜினிக்கு, ரூ. 2 கோடி மதிப்புள்ள BMW X7 மாடல் காரை பரிசாக கொடுத்தார். ஆனால், அனிருத்துக்கு எந்த ஒரு பரிசும் கொடுக்கவில்லையே என ரசிகர்கள் கொந்தளித்தனர். இந்நிலையில் தற்போது அனிருத்தையும் அழைத்து மூன்று உயர்ரக சொகுசு கார்களை லைன் ஆக நிறுத்தி உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதையே எடுத்துக்கொள்ளுங்கள் என கூறினாராம்.

அனிருத்தும் நெல்சனை போல போர்ச் காரை தான் தேர்வு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவருக்கு லட்சக்கணக்கிலான பணத்தொகைக்கான காசோலையும் கையில் கொடுத்து அனிருத்தை டபுள் தமாக்கா குஷி அடைய வைத்துள்ளார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

கலாநிதி மாறனின் கிப்ட் செட்டில்மென்ட் இதோடு நின்றிடுமா? என்று கேட்பீர்களானால் இல்லை… இன்னும் தொடரும். ஆம், அடுத்ததாக ஜெயிலர் படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருக்கிறது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!