இதெல்லாம் ஒரு பேச்சா…? உதயநிதியின் தலையை சீவி விட முடியுமா..? ஆவேசமாக அமைச்சர் கே.என். நேரு..!!

Author: Babu Lakshmanan
5 September 2023, 1:01 pm

தந்தை பெரியாருடைய கொள்கை எல்லா மக்களும் சமமென்று முறையில் எங்களுடைய இளைஞரணி செயலாளர் அந்தக் கொள்கையில் உறுதியாக இருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திருச்சியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி சிதம்பரனாரின் 152 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- பல்வேறு இடங்களில் போர் போடுவதற்காக செல்லும் பொழுது தங்களது இடத்தில் தண்ணீர் குறையும் என்பதால், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அனுப்பி அவர்களை சமாதானப்படுத்தி திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும், எனக் கூறினார்.

இந்தியா கூட்டணியில் உதயநிதிக்கு எதிர்ப்பு இருக்கிறதே என்ற கேள்விக்கு, ‘இதெல்லாம் ஒரு பேச்சா,’ என்று கடந்து சென்றார்.

வடநாட்டில் ஒரு சாமியார் உதயநிதியின் தலைக்கு 10 கோடி ரூபாய் அறிவித்துள்ளார் என்ற கேள்விக்கு, “அதற்கு உதயநிதி பதில் அளித்து விட்டார். எல்லாம் அவர்கள் பேசுவார்கள். இதையெல்லாம் கேள்வி என்று கேட்கிறீர்கள். சீவமுடியுமா அவரால்… எங்களுடைய கொள்கை தந்தை பெரியாருடைய கொள்கை. எல்லா மக்களும் சமமென்று முறையில், எங்களுடைய இளைஞரணி செயலாளர் அந்தக் கொள்கையில் உறுதியாக இருக்கிறார். அதனை எதிர்க்கிற கொள்கையை வேரறுப்போம்,” என தெரிவித்துள்ளார்.

கூட்டணிகள் எதிர்ப்பு இருக்கிறதே என்ற கேள்விக்கு, ’28 பேர் இருக்கிறார்கள். எல்லாம் ஒரே மாதிரியா இருப்பார்களா..? ஒரு விஷயத்தில் எல்லோரும் ஒன்றாக இருப்பார்கள். ஆட்சிக்கு வரும் விஷயத்தில் எல்லோரும் ஒன்றாக இருக்கிறார்கள், என தெரிவித்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 416

    0

    0